பிரியாணி மற்றும் பொரித்த கோழி கேட்ட குழந்தைக்கு கேரள அமைச்சர் பதிலளித்தார்.

பிரியாணியும், பொரிச்ச கோழியும் வேண்டும் என்று கேட்கும் குழந்தையின் வீடியோ ஒன்று சமூக வலைத்தளங்களில் வைரலானதை தொடர்ந்து, அதை கேரள அரசு பரிசீலனைக்கு எடுத்துக் கொண்ட சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கேரளா மாநிலத்தில் குழந்தைகள் பராமரிப்பு மையத்தில் படிக்கும் பையன் தனது தாயிடம், ‘மையத்தில் உப்புமாவுக்கு பதிலாக பிரியாணியும், பொரிச்ச கோழியும் வேண்டும்’ என்று கேட்க அந்த தாய் இந்த சம்பவத்தை வீடியோவாக எடுத்து சமூக வலைத்தளத்தில் பகிர்ந்துள்ளார்.

இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி குழந்தையின் கோரிக்கையை பரிசீலனைக்கு எடுத்துக் கொள்வதாக அம்மாநில அமைச்சர் தெரிவித்துள்ளார். மேலும் குழந்தை கோரிக்கை வைக்கும் வீடியோவை தனது சமூக வலைத்தில் பகிர்ந்த, கேரளா சுகாதார, பெண்கள் மற்றும் குழந்தைகள் நலத்துறை அமைச்சர் வீணா ஜார்ஜ் வீடியோ ஒன்றை வெளியிட்டார்.

அதில் இந்த அரசாங்கத்தின் கீழ், குழந்தைகள் பராமரிப்பு மையத்தில் முட்டை மற்றும் பால் வழங்கும் திட்டம் வெற்றிகரமாக செயல்படுத்தப்பட்டுள்ளது. பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத் துறையுடன் ஒருங்கிணைந்து, உள்ளாட்சி அமைப்புகள் குழந்தைகள் பராமரிப்பு மையத்தில் பல்வேறு வகையான உணவுகளை வழங்குகின்றன. அதே போல், பரிந்துரையை கணக்கில் எடுத்துக்கொண்டு மெனு மதிப்பாய்வு செய்யப்படும். இதை எல்லா குழந்தைகளுக்கும் தெரியப்படுத்துகிறேன்” என்று தெரிவித்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here