கோலாலம்பூர்:
இன்று (பிப்ரவரி 6) முதல் பிப்ரவரி 12 வரையான ஒரு வார காலத்திற்கு நாடு முழுவதும் RON97 மற்றும் RON95 பெட்ரோலின் சில்லறை விலைகள் லிட்டருக்கு முறையே RM3.43 மற்றும் RM2.05 ஆக இருக்கும் என்று கூறப்படுகிறது.
தீபகற்ப மலேசியாவில் டீசலின் சில்லறை விலை லிட்டருக்கு RM3.18 ஆகவும், சபா, சரவாக் மற்றும் லாபுவானில் டீசலின் சில்லறை விலை லிட்டருக்கு RM2.15 ஆகவும் இருக்கும் என்று நிதி அமைச்சகம் நேற்று வெளியிட்டுள்ள ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது.
“உலகளாவிய கச்சாய் எண்ணெய் விலைகளின் போக்குகளை அரசாங்கம் தொடர்ந்து கண்காணித்து, மக்களின் தொடர்ச்சியான நலன் மற்றும் நல்வாழ்வை உறுதி செய்ய பொருத்தமான நடவடிக்கைகளை எடுக்கும்” என்றும் அவ்வறிக்கையில் மேலும் கூறப்பட்டுள்ளது.
























