கோலாலம்பூர்:
செந்தூலில் நேற்று அதிகாலை ஏற்பட்ட தீப்பரவலில் மூன்று வளாகங்கள் மற்றும் 40 மோட்டார் சைக்கிள்கள் தீயில் எரிந்து நாசமாயின.
சம்பவம் தொடர்பில் கோலாலம்பூர் தீயணைப்பு மற்றும் மீட்புத் துறை செயல்பாட்டு மையத்திற்கு அதிகாலை 5.15 மணிக்கு அவசர அழைப்பு வந்தது என்றும், உடனடியாக ஒரு குழுவை சம்பவ இடத்திற்கு அனுப்பட்டது என்றும் தீயணைப்புத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளது.
தீயினால் பாதிக்கப்பட்ட வளாகத்தில் ஒரு கார் பட்டறை, ஒரு மின்னணு சிகரெட் கடை மற்றும் ஒரு உணவகம் ஆகியவை அடங்கும்.
மேலும் “50×50 சதுர அடி பரப்பளவில் பரவிய தீ, வளாகத்தை முற்றாக அழித்தது. மேலும் 40 மோட்டார் சைக்கிள்கள் மற்றும் ஒரு கார் முழுவதும் வளாகம் முற்றாக எரிந்து நாசமானது,” என்று அது மேலும் தெரிவித்துள்ளது.
அதிர்ஷ்டவசமாக, உயிர் சேதம் எதுவும் ஏற்படவில்லை, மேலும் தீ விபத்துக்கான காரணம் இன்னும் விசாரணையில் உள்ளது என்றும் கூறப்படுகிறது.




















