நினைவில் வாழும் மலேசியாவின் முதல் பிரதமர் ‘சுதந்திர தந்தை’ மட்டும் அல்ல ஆனால் ஒற்றுமையின் சின்னமாகவும் திகழ்ந்தார் என்று பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் புகழாரம் சூட்டினார்.
தேசிய சுபிட்சம், ஒற்றுமையை பேணுதல் போன்றவற்றில் துங்குவின் பங்களிப்பை அவர் கோடிட்டு காட்டினார்.
அமைதி, நிலைத்தன்மைக்கு அவர் காட்டிய அசைக்க முடியாத கடப்பாடு மலேசியர்களுக்கு தொடர்ந்து எழுச்சியை தர வேண்டும்.
மலேசிய மடானி பாதையில் நாம் இப்போது பயணித்துக் கொண்டிருக்கிறோம். இந்த பயணத்தில் ஒற்றுமை, உயர்நெறி, அனைவருக்குமான நீதி, சமத்துவம் ஆகியவற்றை கட்டிக்காத்த துங்கு காட்டிய வழியை பின்பற்றுவோம் என்று பிரதமர் அன்வார் மலேசியர்களை கேட்டுக்கொண்டார்.