டெஹ்ரான்: ஈரான் மீது இஸ்ரேல் பதிலடி தாக்குதல் நடத்தி உள்ளது. ஈரான் விமான நிலையங்களில் ஏவுகணை தாக்குதல் நடத்தி உள்ளது. இஸ்ரேலின் பதிலடி தாக்குதல் இன்னும் மோசமாகலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கடந்த சனிக்கிழமை இரவு இஸ்ரேலை ஏவுகணைகள் மூலம் ஈரான் தாக்கியது. இரண்டு நாட்டு மோதல் பெரிய போராக வெடிக்கும் அபாயம் ஏற்பட்டு உள்ளது.
இன்று ஈரான் மீது நடத்தப்பட்ட தாக்குதல் தொடர்பான வெளியான அப்டேட்கள்:
– மத்திய ஈரானில் உள்ள இஸ்பஹான் மாகாணத்தில் வரிசையாக ஏவுகணை தாக்குதல்கள் பதிவாகியுள்ளன.
– ஈராக் மற்றும் தெற்கு சிரியாவில் ஒரே நேரத்தில் வரிசையாக ஏவுகணை தாக்குதல்கள் நடந்துள்ளன.
– ஈரானுக்குள் இஸ்ரேல் தாக்குதல் நடத்தியதை அமெரிக்க வெள்ளை மாளிகை செய்தி தொடர்பாளர் உறுதிப்படுத்தி உள்ளார்.
– ஈரானிய அரசுடன் தொடர்புடைய ஊடகங்கள் இஸ்பஹானில் வெடித்ததை உறுதிப்படுத்துகின்றன
– ஈரானிய வான்வெளியின் முக்கிய பகுதிகள் மூடப்பட்டு உள்ளன.
பதிலடி தாக்குதல்: அமெரிக்காவின் ஆலோசனையை மீறி ஈரான் மீது இஸ்ரேல் பதிலடி தாக்குதல் நடத்தி உள்ளது. கடந்த ஏப்ரல் 1ம் தேதி சிரியாவில் இருக்கும் ஈரான் தூதரகம் மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தியது. இஸ்ரேலியப் படைகள் கடந்த சில மாதம் முன் சிரியா தலைநகர் டமாஸ்கஸ் மற்றும் சிரியா வடக்கு நகரமான அலெப்போவில் உள்ள விமான நிலையங்கள் மீது நேரத்தில் ஏவுகணைத் தாக்குதல்களை இஸ்ரேல் நடத்தியது. அங்கு உள்ள ஓடுபாதைகளை சேதப்படுத்தியதாகவும், இரண்டு குடியிருப்புகள் அருகே ராக்கெட் தாக்குதல் நடத்தியதாகவும் கூறியது.





















