பாவ்னி – அமீருக்கு ஏப்ரல் 20ல் டும்..டும்..டும்.

சின்னத்திரையில் பிரபலமான நடிகை பாவ்னி. பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்றபோது அதில் பயணித்த சக போட்டியாளரான நடன கலைஞர் அமீரை காதலித்தார். இருவரும் அஜித்தின் துணிவு படத்திலும் நடித்தனர். மூன்று ஆண்டுகளாக இவர்கள் காதலிக்கிறார்கள். வருடா வருடம் காதலர் தினம் வரும்போதெல்லாம் ஜோடியாக போஸ்ட் போட்டு தங்கள் காதலை வெளிப்படுத்தி வருகின்றனர். ஆனால், திருமணம் குறித்த கேள்வி கேட்டால் மட்டும் மிக விரைவில் என்று கூறி வந்தனர்.

இப்போது ஒருவழியாக வரும் ஏப்., 20ல் திருமணம் செய்ய போவதாக வா வாழலாம் என்ற தலைப்பில் வீடியோ ஒன்றை வெளியிட்டு அறிவித்துள்ளனர். அதில் தங்களது காதல் பற்றி இருவரும் விவரிக்கும் விதமான வீடியோ, ஆடியோ இடம் பெற்றுள்ளது. அமீர் – பாவ்னிக்கு ரசிகர்கள், சினிமா பிரபலங்கள் என அனைவரும் தங்களது வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here