புக்கிட் பூச்சோங்கில் 29 வயது இளைஞர் ஒருவர் தனது காரை சாலை தடுப்பு சுவரில் மோதியதில் காலில் காயம் ஏற்பட்டது. செவ்வாய்க்கிழமை (பிப்ரவரி 18) இரவு 11.23 மணிக்கு அழைப்பு வந்ததாக சிலாங்கூர் தீயணைப்பு மற்றும் மீட்புத் துறை உதவி இயக்குநர் அஹ்மத் முக்லிஸ் முக்தார் தெரிவித்தார். விபத்திற்குப் பிறகு பாதிக்கப்பட்டவர் காரில் சிக்கிக்கொண்டார்.
இருப்பினும், தீயணைப்பு ஊழியர்கள் அவரை வாகனத்திலிருந்து வெளியேற்றினர் என்று அவர் புதன்கிழமை (பிப்ரவரி 19) ஒரு அறிக்கையில் தெரிவித்தார். பின்னர் காயமடைந்தவர் சிகிச்சைக்காக மருத்துவ பணியாளர்களிடம் ஒப்படைக்கப்பட்டதாக அவர் மேலும் கூறினார்.









