ஈப்போவில் நாயை கைவிட்ட நபர் – வைரலாகும் காணொளி

ஈப்போ: குடியிருப்பு பகுதியில் ஒரு ஆ ஒரு சிறுவனும் ஒரு நாயை கைவிட்டுச் செல்வதைக் காட்டும் வீடியோ வைரலாகி வருகிறது. புதன்கிழமை (பிப்ரவரி 20) வைரலான இந்த காட்சியில், சட்டை அணியாத ஒருவர் ஒரு கையில் ஒரு சிறுவனின் கையையும், மறு கையில் கயிறு கட்டப்பட்ட நாயையும் பிடித்திருப்பதைக் காட்டுகிறது.

ஈப்போவிற்கு அருகிலுள்ள தாமான் ரிஷாவில் அந்த நபர் நின்று, கயிற்றை அகற்றி, நாயை விட்டுவிட்டு நடந்து செல்கிறார். நாய் குரைத்தவுடன், அந்த நபர் திரும்பி வந்து கயிற்றால்  அந்த நாயை அடித்து விட்டு அவ்விடத்தை பின்னர் வெளியேறுகிறார். இந்த சம்பவம் ஒரு குடியிருப்பாளரின் சிசிடிவியில் பதிவாகியுள்ளது.

50 வயதான குடியிருப்பாளர் எம். இந்திரா காந்தி (ஆசிரியர்), தனது பக்கத்து வீட்டுக்காரர் மாலை 5.30 மணியளவில் ஒரு வெள்ளை நாயை ஒரு ஆடவர் கைவிட்டுச் சென்றதாக தனக்குத் தெரிவிக்க அழைத்ததாகக் கூறினார். நாங்கள் சிசிடிவியைப் பார்த்தபோது, ​​என்ன நடந்தது என்பதைக் கண்டோம், நான் அந்த நாயை என் வீட்டிற்கு இப்போதைக்கு கொண்டு வந்தேன் என்று அவர் கூறினார்.

நான் காவல்துறையில் புகார் அளிப்பேன், கால்நடை சேவைகள் துறையிடம் புகார் அளிப்பேன் என்று அவர் மேலும் கூறினார். அந்த நபர் யார்னு எனக்குத் தெரியல, ஏன்னா நான் அவரை முன்னாடி பார்த்ததே இல்லை. அந்த சின்னக் குழந்தையும் நடந்ததை நேரில் பார்க்க வேண்டியிருந்தது ரொம்ப வருத்தமா இருக்கு என்று அவர் சொன்னாள்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here