கோலாலம்பூர், அக்டோபர் 16 –
மலாக்காவில் உள்ள எட்ரா மின் நிலையத்தில் ஏற்பட்ட கோளாறினால், கிள்ளான் பள்ளத்தாக்கு மற்றும் ஜோகூர் பாரு பகுதிகளில் மின்வெட்டு ஏற்பட்ட போதிலும், Rapid KL நிறுவனம் அக்டோபர் 15-ஆம் தேதி மாலை 5 மணி நிலவரப்படி அதன் அனைத்து ரயில் சேவைகளும் வழக்கம்போல் இயங்குவதாக உறுதிப்படுத்தி இருந்தது.
இந்த மின்வெட்டுச் சம்பவத்தால் தங்கள் சேவைகளில் எந்தவித இடையூறும் ஏற்படவில்லை என்றும், பயணிகள் எந்தவித அச்சமும் கொள்ளத் தேவையில்லை என்றும் போக்குவரத்து நிறுவனம் பயணிகளுக்கு உறுதியளித்தது.
மேலும், தெனாகா நேஷனல் பெர்ஹாட் (TNB) நிறுவனம் பாதிக்கப்பட்ட பகுதிகளில் மின்சாரத்தை படிப்படியாக மீட்டெடுத்தது.
இதனிடையே, பயணிகள் அதிகாரப்பூர்வச் சமூக ஊடகங்கள் வழியாக அண்மைச் செய்திகளைத் தெரிந்துகொள்ளுமாறு Rapid KL அறிவுறுத்தியுள்ளது.



















