உத்தரபிரதேச மாநிலம் பிரயாக்ராஜ் நகரில் நடந்து வந்த கும்பமேள நேற்றுடன் நிறைவுப் பெற்றது. பிரயாக்ராஜின் திரிவேணி சங்கமத்தில் நிகழ்ந்துவந்த இந்தக் கும்பமேளாவில் இதுவரை 62 கோடி பேர் நீராடியுள்ளதாக அம்மாநில முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் தெரிவித்திருக்கிறார்.
ஒவ்வொரு நாளும் லட்சக்கணக்கானவர்கள் இரவும் பகலும் இந்த திரிவேணி சங்கமத்தில் நீராடி வந்தார்கள். முக்கிய தினங்களிலும் விடுமுறை நாட்களிலும் இந்த எண்ணிக்கை கோடிகளைத் தொட்டது.
மேலும் வசந்த பஞ்சமி தினத்தன்று மொத்தம் 2.33 கோடி பக்தர்கள் திரிவேணி சங்கமத்தில் புனித நீராடியதாக உத்தர பிரதேச மாநில அரசு தெரிவித்தது.
இந்தத் திரிவேணி சங்கமத்திற்கு வரும் பக்தர்களுக்கு இரவு பகல் என்ற வித்தியாசமே கிடையாது. இங்கே புனித நீராடுவதற்காக எந்த நேரமும் மக்கள் குவிந்துகொண்டேயிருந்தார்கள்.
இப்போது, விழா முடிந்த பிறகு, பொது இடங்களையும் புனிதத் தலங்களை சுத்தம் செய்யும் பணிகள் தொடர்ந்துள்ளதாக அவர் தெரிவித்தார்.









