வடமேற்கு சீனாவின் குளிர்ச்சியான மலைப் பகுதியில் 10 நாட்களாக காணாமல் போன 18 வயது இளைஞர் வெற்றிகரமாக மீட்கப்பட்டுள்ளார்.
கடந்த 10 நாட்களாக உணவின்மையால் அவதிப்பட்ட சன் லியாங், ஆற்று நீர், கரைந்த பனி, பற்பொடியை சாப்பிட்டு உயிர்வாழ்ந்ததாக தெரிவித்துள்ளர்.
சன், தனது பயணத்தை பிப்ரவரி 8 ஆம் தேதி ஷான்ஸியில் (Shaanxi ) அமைந்துள்ள கின்லிங் (Qinling) மலையில் பயணித்துள்ளார். இந்த மலைத்தொடர் கிட்டத்தட்ட 2,500 மீட்டர் உயரம் கொண்டதாகும். தனித்துவமான பசுமை, விலங்கினங்கள் நிறைந்த பிரதேசமாகும்.
பயணத்தை ஆரம்பித்த இரண்டு நாட்களுக்குள், சார்ஜ் முடிந்ததால் குடும்பத்தினருடன் தொடர்பு கொள்ள முடியாமல் காட்டில் தனியாக மாட்டிக்கொண்ட அவர், ஓடையின் குறுக்கே நடைபயணம் செய்ததாகவும், பல முறை கீழே விழுந்து, வலது கையை முறித்துகொண்டதாகவும் கூறினார்.
உள்ளூர் மீட்புப் பிரிவினர் மலைப்பகுதியில் அவரை கண்டுபிடித்து பாதுகாப்பாக மீட்டனர்.







