மலேசிய ஊடக மன்றத்தின் சட்ட மசோதா நேற்று மக்களவையில் அங்கீகரிக்கப்பட்டது

மலேசிய ஊடக மன்றத்தின் சட்ட மசோதா நேற்று மக்களவையில் அங்கீகரிக்கப்பட்டது. இந்த வரலாற்றுப்பூர்வ மசோதா தொடர்புத்துறை துணையமைச்சர் தியோ நீ சிங் அவர்களால் மூன்றாவது வாசிப்புக்குப் பிறகு குரல் வாக்கெடுப்பு மூலம் நிறைவேற்றப்பட்டது.

இந்த மசோதாவின் கீழ், இம்மன்றம் தரங்களை நிர்ணயித்து, ஊடகவியலாளர்களுக்கு நெறிமுறை மற்றும் பொறுப்பான தரங்களுடன் கொண்ட நடைமுறையை உருவாக்குவதை வலியுறுத்துகிறது.

இந்த மசோதா மீதான விவாதத்தில் மொத்தம் 19 நாடாளுமன்ற உறுப்பினர்கள் கலந்துகொண்டனர். இந்த மசோதா முதல் வாசிப்புக்காக கடந்த ஆண்டு டிசம்பர் 12 ஆம் தேதி சமர்ப்பிக்கப்பட்டது.

அமைப்புக் குழு ஊடகத் துறையில் சம்பந்தப்பட்ட தரப்பினருடன் 26 முறை கூட்டங்களை நடத்தியுள்ளது. இதனிடையே, மலேசிய ஊடக மன்ற மசோதா அரசாங்கத்திற்கும் ஊடகத்துறை பிரதிநிதிகளுக்கும் இடையிலான முயற்சிகள் மற்றும் ஒத்துழைப்பால் உருவானது என்று கூறிய
தியோ, அமைப்புக் குழுவில் தற்போது ஊடகத் துறையைச் சேர்ந்த 40 பிரதிநிதிகள் இடம் பெற்றதாகவும் தெரிவித்தார்.

இம்மசோதா நிறைவேற்றத்தை வரவேற்ற தொடர்பு துறை அமைச்சர் ஃபஹ்மி ஃபட்சில் அடுத்து இந்த மசோதா மேலைவக்கு கொண்டு செல்லப்பட்டு பின்னர் மாமன்னரின் ஒப்புதலோடு நடைமுறைக்கு வரும் என்றார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here