காஜாங் வட்டார இந்து சங்கத்தின் 40ஆம் ஆண்டு பொதுகூட்டம்

காஜாங் வட்டார இந்து சங்கத்தின் 40ஆம் ஆண்டு பொதுகூட்டம் வரும் 16.3.2025 ஞாயிற்றுக்கிழமை காலை 10 மணியளவில் பொன்னம்பலம் மண்டபம், ஶ்ரீ சுப்ரமணியர் கோவில், ஜாலான் ரெகோ, காஜாங் எனுமிடத்தில் நடைபெறவுள்ளது.

இறைவணக்கத்தோடு ஆண்டுகூட்டம் ஆரம்பிக்கப்பட்டு வரவேற்புரை தலைமை உரையைத் தொடர்ந்து 39ஆம் ஆண்டு பொதுக்கூட்டக் குறிப்பு வாசிக்கப்பட்டு ஏற்றுக் கொள்ளப்படும் என காஜாங் வட்டார இந்து சங்கத்தின் கெளரவ செயலாளர் கஸ்தூரி கோவிந்தன் தெரிவித்தார்.

மேலும் ஆண்டு பொதுகூட்டம் சில பதவிகளுக்கான உறுப்பினர்கள் தேர்ந்தெடுக்கப்படுவர். வட்டார உறுப்பினர்கள் அனைவரும் மறவாமல் தவறாமல் 40ஆண்டு பொதுகூட்டத்தில் கலந்து கொள்ளுமாறு அவர் கேட்டுக் கொண்டார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here