மாட்சிமை தங்கிய பேரரசர் சுல்தான் இப்ராஹிம், பேரரசியார் ராஜா ஸரித் சோஃபியா , நாட்டின் அனைத்து முஸ்லிம்களுக்கும் ரமலான் வாழ்த்துகளை தெரிவித்துள்ளனர்.
இந்த புனித மாதத்தை உறவுகளை வலுப்படுத்துவதற்கும், உதவி தேவையுள்ளவர்களுக்கு உதவுவதற்கும் ஓர் அரிய வாய்ப்பாக பயன்படுத்த வேண்டும் என பேரரசர் அழைப்பு விடுத்துள்ளார்.
மேலும் இந்த புனித ரமலான் மாதத்தில் எந்தவிதமான விரோதம் அல்லது குழப்பத்திலிருந்து மக்களை பாதுக்காக்க பிரார்த்திக்கிறோம்,” என்று மாமன்னர் தமது ஃபேஸ்புக் பதிவில் தெரிவித்தார்.
அத்துடன், மலேசியா தொடர்ந்து நல்லாசி கிடைக்கவும் அச்சுறுத்தல் மேலும் பேரழிவுலிருந்தும் பாதுகாக்கப்படவும் எல்லா முஸ்லிம்களும் பிரார்த்திக்க வேண்டும் எனவும் அவர் கேட்டுக்கொண்டார்.
இதனிடையே மலேசியா முழுவதும் உள்ள முஸ்லிம்கள் நோன்பை மார்ச் 2 முதல் தொடங்கியுள்ளனர்.









