சுனோஷினி தனபாலன் மிஸ் மலேசியா தோபாஸ் 2025 மகுடம் சூட்டப்பட்டார்

சுனோஷினி தனபாலன் மிஸ் மலேசியா தோபாஸ் 2025 மகுடம் சூட்டப்பட்டு மலேசியாவுக்கு பெருமை சேர்த்து, தனது கனவையும் நனவாக்கியுள்ளார்.

தனது மகிழ்ச்சியை சமூக ஊடகங்களில் பகிர்ந்துகொண்ட அவர், “The Winner, Miss Malaysia Topaz 2025: Next stop, the international stage” என்ற சுலோகத்தை தனது இன்ஸ்டாகிராம் பதிவில் பதிவேற்றிருந்தார்.

அழகிப் போட்டியில் வெற்றி பெற்ற சுனோஷினி பல பன்முக திறமைகள் கொண்டவர். அவர் ஒரு நடனக் கலைஞர், நடிகை. இவற்றை கடந்து ஒரு வெற்றிகரமான தொழிலதிபரும் கூட.

மேலும், இந்த அழகிப் போட்டியில் மிஸ் மலேசியா ரூபி 2025 பட்டத்தை பிரசன்னா ஶ்ரீ, மிஸ் மலேசியா செப்பையர் 2025 பட்டத்தை ஷோரா அச்மான் கைப்பற்றினர். சுனோஷினியின் வெற்றியை மலேசிய அழகிப் போட்டி ரசிகர்கள் சங்கம் மேலும் பலரும் மகிழ்ச்சியுடன் கொண்டாடி வருகின்றனர். இனி, மலேசியாவை அனைத்துலக அரங்கில் பிரதிநிதிக்கவிருக்கும் அவரின் அடுத்த கட்ட பயணம் அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here