உயர் கல்வி நிதிக்கழகத்திடம் வாங்கியக் கடனைத் திருப்பிச் செலுத்தாமல் கறுப்புப் பட்டிலியலிடப்பட்டவர்கள் வெளிநாடு செல்ல தடை

PTPTN எனப்படும் தேசிய உயர் கல்வி நிதிக்கழகத்திடம் வாங்கியக் கடனைத் திருப்பிச் செலுத்தாததால் கறுப்புப் பட்டிலியலிடப்பட்டவர்கள் வெளிநாடு செல்ல தடைவிதிக்கும் நடைமுறையை மீண்டும் கொண்டு வருவது குறித்து அரசாங்கம் ஆராய்ந்து வருகிறது.

PTPTN கடனாளிகள் வெளிநாடு செல்லும் தடை 2018-ஆம் ஆண்டு ரத்து செய்யப்பட்ட நிலையில் அதனை மீண்டும் அறிமுகப்படுத்தும் திட்டமுள்ளதா என நாடாளுமன்ற மேலவையில் கேட்கப்பட்ட கேள்விக்குத் அவர்
பதிலளித்தார்.

இதற்கு முன் அத்தடை அமலில் இருந்த போது PTPTN கடன் வசூலிப்பில் நல்ல முன்னேற்றம் இருந்ததாக, உயர் கல்வி துணை அமைச்சர் டத்தோ முஸ்தபா சக்முட் தெரிவித்தார். அதே சமயம் வேறு சில வழிமுறைகளும் பரிசீலனையில் உள்ளதாக துணை அமைச்சர் சொன்னார்.

அத்தடை அமலில் இருந்த போது கடன் வசூலிப்பு 4 பில்லியன் ரிங்கிட்டாக இருந்தது; ரத்து செய்யப்பட்ட பிறகு படிப்படியாகக் குறைந்து வருவதாக செனட்டர் டத்தோ ரொஸ்னி சொஹார் தனது கேள்வியில் சுட்டிக் காட்டியிருந்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here