அனைத்துலக விண்வெளி நிலையத்தில் 10 மாதங்கள் கழித்த பிறகு, சுனிதா வில்லியம்ஸ், புட்ச் வில்மோர் மார்ச் 16 ஆம் தேதிக்கு முன் பூமிக்கு திரும்புவார்கள் என்பதை நாசா உறுதிப்படுத்தியுள்ளது.
சுனிதா மற்றும் புட்ச் வில்மோர், கடந்த 2024 ஆம் ஆண்டு ஜூன் மாதம் 10 நாட்கள் மட்டுமே நீடிக்கும் ஒரு பயணத்தில் புறப்பட்டனர். ஆனால், போயிங் ஸ்டார்லைனர் (Boeing Starliner) விண்கலத்தில் ஏற்பட்ட தொழில்நுட்ப சிக்கல்களின் காரணமாக, இவர்கள் இருவரும் கிட்டத்தட்ட 10 மாதங்களாக விண்வெளி நிலையத்தில் உள்ளனர்.
இந்த வாரம் ஸ்பேஸ்எக்ஸ் (SpaceX) நிறுவனத்தின் Crew-10 பயணத்திற்கு ஏற்பாடு செய்ய அனுமதி அளிக்கப்பட்டுள்ளதாக நாசாஅறிவித்துள்ளது.









