நாசாவில் முக்கிய அதிகாரிகள் திடீர் நீக்கம்

வாஷிங்டன்:அமெரிக்கா நாட்டின் விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமாக நாசா உள்ளது. உலக புகழ்பெற்ற இந்த நிறுவனத்தில் பல்வேறு நாடுகளை சேர்ந்த ஆராய்ச்சியாளர்களாக பணிபுரிந்து வருகிறார்கள். நாசாவில் வானிலை ஆய்வு மற்றும் பருவக்கால மாறுபாடு இலாகா தலைவராக கேத்ரின் கால்வின் என்ற பெண் ஆராய்ச்சியாளர் பணி புரிந்து வந்தார்.

இந்தநிலையில் அமெரிக்கா ஜனாதிபதியாக டிரம்ப் பதவி ஏற்றதில் இருந்து அரசு அலுவலகங்களில் பணி புரிந்து வரும் பலரை பணி நீக்கம் செய்து வந்தார். தற்போது கேத்ரின் கால்வின் உள்ளிட்ட 23 பேரை நாசாவில் இருந்து பணிநீக்கம் செய்து ஜனாதிபதி டிரம்ப் உத்தரவிட்டுள்ளார். நாசாவில் வானிலை மாறுபாடு என்றும் துறை தேவையில்லாதது என டிரம்ப் ஏற்கனவே கூறி வந்தது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here