அடையாளம் தெரியாத மூன்று வெளிநாட்டு குற்றவாளிகளை டேசா விஸ்தாவில் போலீசார் சுட்டுக் கொன்றனர்

இன்று காலை சுமார் 3 மணியளவில் அடையாளம் தெரியாத மூன்று வெளிநாட்டு குற்றவாளிகளை டேசா விஸ்தாவில் போலீசார் சுட்டுக் கொன்றனர்.

அங்கு ஒரு வீட்டில் கொள்ளையிட சென்றபோது வீட்டின் அலாரம் ஒலித்ததை கேட்டு உரிமையாளர் உடனடியாக போலீசாரை தொடர்பு கொண்டதாக குற்றப்புலனாய்வு இலாகா (JSJ) துணை இயக்குநர் டத்தோ படில் மார்சுஸ் தெரிவித்தார்.

தகவலைப் பெற்ற போலீசார் உடனடியாக தேடும் பணியை மேற்கொண்டனர். 35 முதல் 40 வயது சந்தேக நபர்கள், போலீசாரை பாராங்கத்தியால் தாக்க முயன்ற போது அவர்கள் சுட்டுக் கொல்லப்பட்டதாக படில் மார்சுஸ் தெரிவித்தார்.

இந்த மூன்று வெளிநாட்டு நபர்கள் சிலாங்கூர், கோலாலம்பூர் மற்றும் நெகிரி செம்பிலான் பகுதிகளில் வீட்டு கொள்ளை குற்றங்களில் தீவிரமாக ஈடுபட்டிருந்ததாகவும், சுமார் 1 மில்லியன் ரிங்கிட் அளவிலான இழப்புகள் ஏற்பட்டதாகவும் தெரிகிறது.

இந்த மூன்று குற்றவாளிகளின் உடல்கள் பிரேதப் பரிசோதனைக்காக செர்டாங் மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here