இங்கிலாந்து பூப்பந்துப் போட்டியின் காலிறுதிச் சுற்றுக்கு முன்னேறியுள்ளனர் தேசியப் பூப்பந்து மகளிர் இரட்டை ஜோடி பெர்லி தான் – எம். தீனா.

அகில இங்கிலாந்து பூப்பந்துப் போட்டியின் காலிறுதிச் சுற்றுக்கு முன்னேறியுள்ளனர் தேசியப் பூப்பந்து மகளிர் இரட்டை ஜோடி பெர்லி தான் – எம். தீனா.

பிர்மிங்ஹமில் காலிறுதிக்குள் நுழைந்த இரண்டாவது மலேசிய இரட்டையராக பெர்லி-தீனா திகழ்கின்றனர்.

இந்தோனேசியாவின் அப்பிராணி ரஹாயு-சித்தி ஃபடியா சில்வா ராமாதந்தி Apriyani Rahayu-Siti Fadia Silva Ramadhanti ஜோடியை 21-16, 21-14 என்ற புள்ளிக்கணக்கில் நாற்பதே நிமிடங்களில் வெகு எளிதாக தோற்கடித்தனர்.

உலகத் தர வரிசையில் ஐந்தாமிடத்திலுள்ள பெர்லி-தீனா ஜோடி, 29-ஆவது இடத்திலிருக்கும் அந்த இந்தோனேசிய ஜோடியை வீழ்த்துவது, 6 ஆட்டங்களில் இது நான்காவது முறையாகும்.

பெர்லி-தீனா இருவரும் இன்றைய காலிறுதி ஆட்டத்தில், கடந்தாண்டு பாரிஸ் ஒலிம்பிக் போட்டியில் வெண்கலப் பதக்கத்திற்கான ஆட்டத்தில் தங்களைத் தோற்கடித்த ஜப்பானின் நாமி மட்சுயாமா – சிஹாரு ஷிடா Nami
Matsuyama-Chiharu Shida இணையைச் சந்திப்பர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here