இந்தோனேசியாவின் வட சுமத்ரா மேற்கு கரையின் அருகில் இன்று காலை 6.22 மணிக்கு, நிலநடுக்கம் நிகழ்ந்தது

இந்தோனேசியாவின் வட சுமத்ரா மேற்கு கரையின் அருகில் இன்று காலை 6.22 மணிக்கு, 5.1 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் நிகழ்ந்தது.

இந்த நிலநடுக்கம் இந்தோனேசியாவிலிருந்து 41 கிலோமீட்டர் கிழக்கில் அமைந்துள்ள சிபோல்காவில் 10 கிலோமீட்டர் ஆழத்தில் நிகழ்ந்ததாக மலேசிய வானிலை ஆய்வு மையம் MetMalaysia அறிவித்தது.

இந்த நிலநடுக்கத்தின் அதிர்வுகள், மலேசியாவின் பெர்லிஸ், கெடா, பினாங்கு, பேராக், சிலாங்கூர், கோலாலம்பூர், புத்ராஜெயா, நெகிரி செம்பிலான், மலக்கா, ஜோகூர் ஆகிய இடங்களில் உணரப்பட்டது.

இந்த நிலநடுக்கம் மலேசியாவுக்கு சுனாமி அபாயத்தை ஏற்படுத்தவில்லை என MetMalaysia உறுதிப்படுத்தியது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here