நேற்று காலை சுமார் 9.30 மணிக்கு ஒரு பல்கலைக்கழகத்தின் மாணவி, பல்கலைக்கழக நூலகத்தின் முன் தனது முன்னாள் காதலனால் பல முறை முதுகு பகுதியில் குத்தப்பட்டதால் கடுமையான காயங்களுக்கு உள்ளாகி சுல்தான் அப்துல் ஹலிம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
சந்தேக நபரும் அப்பெண்ணும் பட்டர்வொர்த்தில் Butterworth- ஒன்றாக சேர்ந்து படிக்கும் போது காதலை முறித்துக்கொண்டதன் அதிருப்தியில் இச்சம்பவம் நிகழ்ந்ததாக போலீஸ் அறிக்கையில் கூறப்பட்டது.
அதே சமயத்தில், கோல மூடா மாவட்ட போலீஸ் தலைவர், உதவி ஆணையர் வான் அஸாருடின் வான் இஸ்மாயில் இச்சம்பவத்தை உறுதிப்படுத்தி, சந்தேகப் நபர் உடனடியாக கைது செய்யப்பட்டதாக தெரிவித்தார்.









