இன்று அதிகாலை லூனாஸில் உள்ள ஒரு பட்ஜெட் ஹோட்டலில் சட்டப்படி இன்னொருவரின் மனைவியாக இருந்து வந்ததுள்ள ஒரு பெண், தனது காதலனுடன் பாலியல் தொடர்பில் ஈடுபட்டிருந்த போது பிடிபட்டுள்ளார்.
மூன்று குழந்தைகளுக்கு தாயான 33 வயதுடைய அப்பெண், தனது 30 வயது காதலனை சந்திக்க பகாங்கிலிருந்து இங்கு வந்ததாக நம்பப்படுகிறது.
பகாங்கில் உள்ள ஒரு உணவகத்தில் பணிபுரியும் அவர், தனது உறவினரால் அறிமுகப்படுத்தப்பட்ட பின்னர், ஏழு ஆண்டுகளுக்கு முன்பு தனது காதலனை சந்தித்ததாகக் கூறினார்.
அக்காதலன் இன்னும் திருமணமாகாத நிலையில் அந்தப் பெண்ணுக்கு திருமணமான பிறகு அவர்களது உறவு முடிவுக்கு வந்ததுள்ளது. இந்நிலையில் அவ்விருவரும் சமீபத்தில் மீண்டும் இணைந்துள்ளனர்.
இதனையடுத்து,அப்பெண்ணின் கணவர் தனது குடும்ப உறுப்பினர்களுடன் குறிப்பிட்ட பட்ஜெட் ஹோட்டலில் தனது மனைவியை கையும் கலவுமாக பிடித்த பின்னர் கூலிம் மாவட்ட மத அலுவலக அமலாக்க அதிகாரிகளைத் தொடர்பு கொண்டுள்ளார்.








