கோலாலம்பூர்,
வரி பாக்கி அல்லது நிலுவையில் உள்ள வரியை ஆன்லைன் வழி ( இ-அன்சூரன் e- Ansuran) செலுத்துவதற்கு விண்ணப்பம் செய்யலாம் என்று மலேசிய உள்நாட்டு வருமான வரி வாரியம் (HASIL) தெரிவித்தது. Portal My Tax வழி 2025 மார்ச் 5ஆம் தேதி முதல் இந்தச் சலுகை அமலில் இருக்கிறது என்று அவ்வாரியம் கூறியது.
எந்தவோர் இணைப்பு ஆவணங்கள் இன்றி இயல்பாகவே இந்த நடைமுறையைப் பயன்படுத்துவதற்கு அனுமதிக்கப்படுகிறது. இதன்வழி வரி பாக்கி அல்லது வரி நிலுவை வைத்திருப்போர் மிக எளிதான முறையில் அதனைச் செலுத்துவதற்கு வகை செய்யப்பட்டிருக்கிறது.
வரி செலுத்துவோர் e-Ansuran சேவைக்கு விண்ணப்பம் செய்வதற்கு கீழ் குறிப்பிட்ட தகுதியைப் பெற்றிருக்க வேண்டும்.
1. வரி பாக்கி அல்லது நிலுவை 300 ரிங்கிட் அல்லது அதற்குக் கூடுதலாக இருக்க வேண்டும்.
- இரண்டு அல்லது 6 தவணையில் மட்டும் அதனைச் செய்வதற்கு வாய்ப்பு வழங்கப்படுகிறது.
- இது வருமான வரிக்கு மட்டுமே பொருந்தும்.
- நடப்பிலுள்ள தவணை முறை இதில் சேர்த்துக் கொள்ளப்படமாட்டாது. வரி செலுத்துவோர் https:// mytax.hasil.gov.my/ என்ற வலைத்தளத்தில் வலம்வந்து Portal MyTax -இல் லோக் இன் செய்யலாம். தனிநபர், இயக்குநர், இயக்குநரின் பிரதிநிதி இதனைச் செய்யலாம். கூடுதல் தகவலாக e-Ansuran விண்ணப்பம் ரத்து செய்யப்படுவதற்கு HASIL அலுவலகத்தில் மட்டுமே செய்ய முடியும் என்று மலேசிய உள்நாட்டு வருமான வாரியம் அதன் ஓர் அறிக்கையில் தெரிவித்தது.
வரி செலுத்துவோருக்கு மிகவும் தளர்வான ஓர் அணுகுமுறையில் வரியைச் செலுத்துவதற்கு HASIL இந்த வசதியை அறிமுகம் செய்திருக்கிறது. e-Ansuran அமலாக்கத்தின் வழி வரி செலுத்துவோர் அவரின் கடமையை நேர்த்தியாகவும் எளிதாகவும் செய்வதற்கு வழிவகுக்கிறது என்றும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டது.
மேலதிகத் தகவல்களுக்கு:
a) Hasil Contact Centre (HCC) di talian 03-8911 1000/603-8911 1000 (Luar Negara);
b) HASiL Live Chat; dan
c) Borang Maklum Balas di portal rasmi HASIL di pautan pantas https:// maklumbalaspelanggan.hasil.gov.my/Public/









