காஜாங்,
புனித ரமலான் மாதத்தை முன்னிட்டு லோட்டஸ் ஸ்டோர்ஸ் மலேசியா நிறுவனம் சமூக நலன் சார்ந்த நடவடிக்கைகளில் தங்களின் கடப்பாட்டை உறுதிப்படுத்தும் வகையில், “கீத்தாக்கான ஜீரான ரமலான் கூக்கவுட்’ என்ற அன்பளிப்பு திட்டத்தை இவ்வாண்டும் செவ்வனே செயற்படுத்தியுள்ளது. நான்காவது ஆண்டாக தொடரும் இந்த நிகழ்வு ‘விலைமதிப்பற்ற புன்னகை’ என்ற பிரச்சாரத்தின் ஒரு பகுதி ஆகும். சமூகத்தினரின் அடிப்படை தேவைகளைப் பூர்த்தி செய்யும் நோக்கத்தில், ஆரோக்கியமான
கொண்டுள்ளது இந்தச் சமையல் திட்டம் உணவு, பங்களிப்புகளை வழங்குவதை இலக்காக லோட்டஸ் காஜாங்கில், 80க்கும் மேற்பட்ட லோட்டஸ், இதர சமூக ஆர்வல அமைப்புகளின் ஒத்துழைப்போடு பூட் எய்ட் ஃபவுண்டேஷன் எனப்படும் துணையோடு இந்த சமையல் நிகழ்ச்சி நடத்தப்பட்டது. காஜாங்கில் உள்ள பல்வேறு சமூக நல அமைப்புகள், இல்லங்களைச் சேர்ந்த 600 சமூக உறுப்பினர்களுக்கு இத்திட்டத்தின் வழி உணவு வழங்கப்பட்டது. லோட்டஸ் உணவு உதவி அறவாரியத்தைச் சேர்ந்த 60க்கும் மேற்பட்ட தன்னார்வலர்களின் ஆதரவுடன் இந்த உணவு விநியோகம் நடைபெற்றது.
இக்லாஸ் மலேசியா, மாக்மூடா மலேசியா, அல்ஃபிக்ரா உள்ளிட்ட பல்வேறு அறக்கட்டளைகளுக்கு இதன் வழி உணவுகள் வழங்கப்பட்டன.

மேலும் காஜாங் லோட்டஸ்க்கு வருகை புரிந்த பெங்காசே வர்கா பிரிஹாத்தின், ஏசான் அஸ் ஷக்குர் சமூக நல இல்லங்களைச் சேர்ந்த 100 குழந்தைகள், ஓமார் ஹானாவுடன் விளையாட்டு, கலை, கைவினை செயல்பாடுகளில் திளைத்தனர். ரமலான் மாதம் மிகுந்த ஆசீர்வாதம் நிறைந்த மாதமாக அமையப்பெற, தானதர்மங்கள் சமூக வளர்ச்சிக்கான ஒத்துழைப்புகளை நல்குவதல் அதற்கான பலாபலன்களை நாம் அனுபவிக்க முடியும் என்று லோட்டஸ் மலேசியாவின் தலைமை இயக்குநர் அஸ்லிஸா அஸ்மல் தெரிவித்தார்.

இந்த நிகழ்ச்சியில் 500 பேருக்கு உணவு. பானங்களை உட்படுத்திய அத்தியாவசிய பொருட்களும் வழங்கப்பட்டன. 23 தேர்ந்தெடுக்கப்பட்ட லோட்டஸ் பேரங்காடிகளில் ரமலான் மாதம் முழுவதும் ஹரிராயா சிறப்பு உதவி திட்டங்கள் நல்கப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது. சக பிரபல நிறுவனங்களின் ஒத்துழைப்புடன் 250,000 ரிங்கிட் மதிப்பிலான கோழி, அன்றாட சமையலுக்குத் தேவையான அடிப்படைப் பொருள்கள், குடிநீர் பானங்கள் உள்ளிட்ட பொருட்கள் நாடு முழுவதிலுமுள்ள 40 பள்ளிவாசல்களின் வழி 16,000க்கும் மேற்பட்டோருக்கு விநியோகம் செய்யப்பட்டது.









