கடைகளில் புகையிலை பொருட்களை காட்சிப்படுத்துவதற்கு தடை

கடைகளில் புகையிலை பொருட்களை காட்சிப்படுத்துவதற்கு விதிக்கப்பட்டுள்ள தடையை அமல்படுத்துவது தற்போது கட்டம் கட்டமாக முன்னெடுக்கப்படுவதாக சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது.

இந்தத் தடையானது ஏப்ரல் 1 ஆம் தேதி முதல் நடைமுறைக்கு வருவதால் புகையிலை பொருட்களின் தயாரிப்புகளை விற்கும் 51,000 த்திற்கும் மேற்பட்ட கடைகள் பாதிப்புகளை எதிர்நோக்கும் என அவர் தெரிவித்தார்.

முழு இணக்கத்திற்கான காலக்கெடு இப்போது அக்டோபர் 1 ஆம் தேதிக்கு மாற்றியமைக்கப்பட்டுள்ள நிலையில், அதன் செயலாக்கம் படிப்படியாக நடைபெறும் என்று சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

இந்த நடவடிக்கை, மறைமுக விளம்பர நடவடிக்கைகளைத் தடுப்பதற்கு முக்கியமாக இருக்கும் என்பதோடு புகையிலைப் பொருட்களை காட்சிக்கு வைப்பதற்கான தடையின் நோக்கத்திற்கு எதிராக இருக்கும் என்றார் அவர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here