2025ஆம் ஆண்டிற்கான பணி ஓய்வுபெறும் சிறந்த நாடுகளின் பட்டியலில் 7-ஆவது இடத்தை பிடித்துள்ளது மலேசியா.
இந்தப் பட்டியலில் மலேசியா மற்றும் தாய்லாந்து ஆகியவை மட்டுமே தென் கிழக்கு ஆசியாவிலிருந்து முதல் 10 இடங்களில் இடம்பெற்றுள்ளன.
மலேசியாவில் வாழ்க்கை செலவீனம் குறைவாக இருப்பதாகவும் சுகாதார கவனிப்பு சிறப்பாக இருப்பதாகவும் அனைத்துலக சுற்றுலாப் பயணிகள் தெரிவித்துள்ளனர்.
புதிய குடியுரிமை விருப்பங்களாக “Malaysia My Second Home” (MM2H) திட்டம் போன்ற நீண்டகால விசா விருப்பங்கள், ஓய்வுபெற்ற வெளிநாட்டவர்களுக்கு மலேசியாவில் வசிக்க ஒரு சிறந்த வாய்ப்பாக அமைந்துள்ளதாகவும் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
அதே நேரத்தில் உள்ளூர் உணவகங்களில் உணவின் விலை 10 ரிங்கிட்டிற்கு குறைவாக இருப்பதும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
ஓய்வுபெற சிறந்த இடங்களின் பட்டியலில் பனாமா முதலிடத்திலும் போர்த்துகல் இரண்டாவது இடத்திலும், கோஸ்டாரிக்கா மூன்றாவது இடத்திலும் உள்ளன.









