நடிகை ஐஸ்வர்யா ராய் பச்சனின் கார் மீது இன்று பேருந்து ஒன்று மோதி விபத்துக்குள்ளானது

நடிகை ஐஸ்வர்யா ராய் பச்சனின் கார் மீது இன்று பேருந்து ஒன்று மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் பெரிய சேதம் எதுவும் ஏற்படவில்லை.

இந்தச் சம்பவத்தால் சாலையில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. அதிர்ஷ்டவசமாக, காருக்கு பெரிய சேதம் எதுவும் ஏற்படவில்லை. ஒரு சிறிய விவாதத்திற்குப் பிறகு, அங்கிருந்து கார் புறப்பட்டது.

இது தொடர்பான வீடியோ சமூக வலைதளத்தில் வெளியான நிலையில், ரசிகர்கள், ஐஸ்வர்யா ராய்க்கு என்ன ஆச்சு என கவலையுடன் கருத்துகளை பதிவிட்டு வந்தனர். இருப்பினும், இந்தச் சம்பவத்தின் போது நடிகை ஐஸ்வர்யா ராய், காரில் இருந்தாரா என்பது உறுதிப்படுத்தப்படவில்லை.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here