சீனாவில் இருந்து சென்னை நோக்கிச் சென்ற ஏர் ஆசியா விமானம், நடுவானில் அதன் வலதுபுற இயந்திரத்தில் ஏற்பட்ட தீ காரணமாக, நேற்று இரவு KLIA2-இல் அவசரமாக தரையிறங்கியது.
இரவு 10.37 மணிக்கு அவசர அழைப்பு பெற்றதுடன், உடனடியாக ஒன்பது தீயணைப்புக் வீரர்களை Runway 3-க்கு அனுப்பியதாக சிலாங்கூர் மாநில தீயணைப்பு, மீட்பு இலாகா நடவடிக்கை பிரிவின் துணை இயக்குநர் அமாட் முக்லிஸ் மொக்தார் கூறினார் .
நியுமெட்டிக் டக்டிங் Pneumatic ducting எனும் பகுதியில் ஏற்பட்ட பழுது காரணமாக விமான இயந்திரத்தில் தீப்பிடித்தது. விமானம் தரையிறங்குவதற்கு முன் தீ முற்றிலுமாக அணைக்கப்பட்டதாக அவர் குறிப்பிட்டார்
விமானத்தில் இருந்த 171 பயணிகளும் விமான பணியாளர்களும் பாதுகாப்பாக விமானத்திலிருந்து வெளியேற்றப்பட்டதாக இன்று வெளியிட்ட அறிக்கையில் அவர் கூறினார்.










