மலேசிய டாக்சிகளுக்கான சிங்கப்பூர் நுழைவுக் கட்டணம் $15-ஆக உயர்வு: 2027 முதல் புதிய நடைமுறை!

சிங்கப்பூர்:

ரும் 2027-ஆம் ஆண்டு ஜனவரி 1-ஆம் தேதி முதல், சிங்கப்பூருக்குள் நுழையும் மலேசியப் பதிவு பெற்ற டாக்சிகளுக்கு ஒவ்வொரு பயணத்திற்கும் 15 சிங்கப்பூர் டாலர் (சுமார் 48 ரிங்கிட்) புதிய நுழைவுக் கட்டணமாக விதிக்கப்படும் என்று சிங்கப்பூர் நிலப் போக்குவரத்து வாரியம் (LTA) அறிவித்துள்ளது.

தற்போது நடைமுறையில் உள்ள மாதந்திர 2 சிங்கப்பூர் டாலர் கட்டண முறைக்கு மாற்றாக இந்த புதிய கட்டண உயர்வு அமல்படுத்தப்படவுள்ளது. இரு நாட்டு டாக்சிகளுக்கு இடையிலான இயக்கச் செலவு (Operating Costs) வேறுபாட்டைக் குறைக்கும் நோக்கில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக எல்டிஏ (LTA) தெரிவித்தது.

மேலும், காப்புறுதி (Insurance) பாதுகாப்பு இல்லாத சட்டவிரோத வாகனப் போக்குவரத்து சேவைகளைப் பயணிகள் முற்றிலும் தவிர்க்க வேண்டும் என்றும், விதிமீறல்களில் ஈடுபடும் வாகன ஓட்டிகள் மீது கடுமையான சட்ட நடவடிக்கைகள் தொடரும் என்றும் LDA எச்சரித்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here