சுபாங் ஜெயா SS14இல் ஒரு வீட்டிற்குள் நுழைந்து தப்பி ஓட முயன்ற இரண்டு பேர் மீது, போலீசார் துப்பாக்கி சூடு நடத்தினர். சுபாங் ஜெயா காவல்துறைத் தலைவர் வான் அஸ்லான் வான் மமட் கூறுகையில், சந்தேக நபர்கள் வீட்டிற்குள் நுழைந்து தப்பி ஓட முயன்றபோது, போலீசார் அக்காரை நோக்கி பல முறை துப்பாக்கிச் சூடு நடத்தியதாக பெர்னாமா தெரிவித்துள்ளது.
தப்பிக்க முயன்றபோது, மோட்டார் சைக்கிளில் வந்த ஒரு போலீஸ்காரரை அவர்கள் இடித்துத் தள்ளினர். இதனால் மற்ற போலீசார் காரை நோக்கிச் சுட்டனர். 30 மற்றும் 40 வயதுடைய இந்த ஜோடி, SS14 மேம்பாலத்தை நோக்கிச் செல்ல முயன்றது. பின்னர் போலீசாரால் அவர்கள் கைது செய்யப்பட்டனர். அவர்கள் மீது வீட்டு உடைப்பு, கொலை முயற்சி வழக்குகள் பதிவு செய்யப்பட்டு விசாரிக்கப்படுகின்றனர்.









