கோத்தா பாரு: பாசீர் பூத்தேயின் செலிசிங், கம்போங் புக்கிட் அபாலில் உள்ள ஒரு பாடி வயலில் மனிதனுடையது என நம்பப்படும் ஒரு மண்டை ஓடு மற்றும் எலும்புகள் கண்டெடுக்கப்பட்டன. பாசீர் பூத்தே காவல்துறைத் தலைவர் ஜைசுல் ரிசால் ஜகாரியா, திங்கள்கிழமை (ஏப்ரல் 7) பிற்பகல் 3 மணியளவில் இந்த கண்டுபிடிப்பு குறித்து போலீசாருக்குத் தெரிவிக்கப்பட்டதாகக் கூறினார்.
தகவலின் பேரில், காவல்துறை அதிகாரிகள் குழு சம்பவ இடத்திற்குச் சென்று, மனித எலும்புக்கூடு என்று நம்பப்படும் ஒரு மண்டை ஓடு மற்றும் எலும்புகளைக் கண்டுபிடித்தது. தேடுதலில் இந்த வழக்குடன் தொடர்புடைய எந்த குற்றவியல் கூறுகளும் இல்லை என்று அவர் செவ்வாய்க்கிழமை (ஏப்ரல் 8) ஒரு அறிக்கையில் தெரிவித்தார்.
இந்த வழக்கு திடீர் மரணம் என வகைப்படுத்தப்பட்டுள்ளது. தகவல் தெரிந்த எவரும் செலிங் காவல் நிலையத் தலைவர் சார்ஜென்ட் மேஜர் சுஹைமி அப்துல்லாவை 019-2424434 என்ற எண்ணில் அல்லது பாசீர் பூத்தே காவல் செயல்பாட்டு அறையை 09-7867222 என்ற எண்ணில் தொடர்பு கொள்ள வேண்டும் என்றும் அவர் கூறினார். – பெர்னாமா









