புத்ரா ஹைட்ஸ் தீச்சம்பவம்: பாதிக்கப்பட்ட வீடுகளைப் புதுப்பிப்பதற்கு செயல்திட்டம் தயார்.

புத்ராஜெயா,

 2025 ஏப்ரல் 1ஆம் தேதி சிலாங்கூரில் உள்ள புத்ரா ஹைட்ஸில் நிகழ்ந்த எரி வாயுக் குழாய் வெடிப்புத் தீச்சம்பவத்தை அமைச்சரவை மிகவும் அக்கறையுடனும் பரிவுடனும் கருதுகிறது. இதில் அதீத கவனம் செலுத்துவதன் அவசியத்தை யும் அமைச்சரவை வலியுறுத் தியது என்று வீடமைப்பு. ஊராட்சித்துறை அமைச்சர் ஙா கோர் மிங் நேற்றுக் கூறினார்.

இச்சம்பவத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு மத்திய மடானி அரசாங்கமும் சிலாங்கூர் மாநில அரசாங்கமும் பல்வகையான உதவிகளைத் தொடர்ந்து வழங்கி வருகின்றன. ரொக்க உதவி, தற்காலிக வாடகை வீட்டிற்கான நிதி உதவி, இலவச வாகனங்கள் போன்றவை அதில் அடங்கும்.

அதேசமயத்தில் பாதிக்கப்பட்ட வீடுகளை மீண்டும் நிர்மாணிப்பதிலும் பழுதுபார்த்துக் கொடுப்பதிலும் வீடமைப்பு ஊராட்சித்துறை அமைச்சு முக்கியக் கவனம் செலுத்தி வருகிறது என்று அமைச்சர் தெரிவித்தார். இதற்காக அமைச்சு கடந்த வாரம் சிறப்புப் பணிக்குழுவை அமைத்தது.

அமைச்சின் கீழ் அனைத்து ஏஜென்சிகளும் இதில் இடம்பெற்றுள்ளன. குறிப்பாக ஷரிக்காட் பெருமாஹான் நேஷனல் பெர்ஹாட் (எஸ்பிஎன்பி), பெர்பாடானான் பிரிமா மலேசியா (பிரிமா) ஆகியவை அமலாக்கப் பணிகளில் முழுவீச்சில் ஈடுபடும் என்று ஙா தெரிவித்தார். இந்தப் பணிக்குழுவானது தீயில் நாசமடைந்த, மிகவும் கடுமையாகப் பாதிக்கப்பட்ட வீடுகளை எவ்வாறு மறுநிர்மாணிப்புச் செய்வது, பழுதுபார்ப்பது போன்றவற்றை வரையறுக்கும் செயல்திட்டத்தை உருவாக்கி இருக்கிறது. இந்தச் செயல்திட்டம் பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார். இப்ராஹிடம் நேற்று வழங்கப்பட்டது என்று அமைச்சர் குறிப்பிட்டார்.

ஆகியவை பேரிடர் பகுதியில் துப்புரவுப் பணியை மேற்கொள்வதில் சிலாங்கூர் மாநில அரசாங்கத்திற்கு முழு ஒத்துழைப்பையும் உதவியையும் வழங்கும் என்று அவர் தெரிவித்தார். இந்த இரண்டு நிறுவனங்களும் 2025 ஏப்ரல் 12, 13 ஆகிய இரு தினங்களில் பேரிடர் பகுதியில் துப்புரவுப் பணிகளை மேற்கொள்ளும் என்று ஙா கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here