சிங்கப்பூரில் அறிமுகமாகியது ஃபூட்பாண்டாவின்(foodpanda) தானியங்கி ரோபோ.

சிங்கப்பூர் : உணவு மற்றும் மளிகைப் பொருட்களை விநியோகிக்கும் பிரபல நிறுவனமான ஃபூட்பாண்டா (foodpanda) தானியங்கி ரோபோக்களை தனது சேவையில் அறிமுகப்படுத்தி அவற்றினை கடந்த மே மாதத்திலிருந்து பரீட்சித்து பார்க்கும் செயற்பாட்டில் இறங்கியுள்ளது.

நன்யாங் தொழில்நுட்ப பல்கலைக்கழகத்தின் (என்.டி.யு) விஸ் மொபிலிட்டி,  சிங்கப்பூரைச்  சேர்ந்த ஓட்சா மற்றும்  சீன  தானியங்கி  வாகன நிறுவனமான நியோலிக்ஸ் போன்ற மூன்று ரோபோட்டிக்ஸ் நிறுவனங்களுடன் கூட்டு சேர்ந்து  இப்புதிய

திட்டத்தினை செயல்படுத்தி வருகின்றது.

இந்த மூன்று நிறுவனங்களின் பங்களிப்புடன் உருவாக்கப்பட்ட இந்த ரோபோக்கள், குறிப்பாக கடினமான இடங்கள், மோசமான வானிலை மற்றும் பரபரப்பான நேரங்களில் பொருட்களை விநியோகிக்க முடியும். இதன் மூலம் அவர்களது விநியோகிப்பாளர்களுக்கு கூடுதல் ஆதரவை வழங்க முடியும் என்றும் , மேலும் அதிக நேரம் இவ் ரோபோக்களால் வேலை செய்யவும் முடியும் என்றும் அந் நிறுவனம் குறிப்பிட்டது.

இந்த கோவிட் பெருந்தொற்று காலத்தில் ஏற்பட்ட முடக்க நிலையே நிறுவனங்களை இவ்வாறு தொடர்பு இல்லாத, நிலையான மற்றும் திறமையான சுற்றுச்சூழல் அமைப்பு சேவைகளை நோக்கி முன்னோக்கி வளர்ச்சியடைய உதவுகின்றது.

கடந்த மாதம், ஃபூட்பாண்டாவின் போட்டி நிறுவனமான கிராப் (Grab) ரோபோ ரன்னர் சேவையை அறிமுகப்படுத்தி அதனை பரீட்சித்து பார்ப்பதற்க்கு தயாராக இருப்பதாக அறிவித்தது. இது சிங்கப்பூரில் உள்ள பயா லெபார் குவார்டர் மாலில் உள்ள பல உணவகங்களின் ஆடர்களை ஒருங்கிணைக்க உதவும் என்று  கிராப் நிறுவனம் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

“இந்த ரோபோக்கள், எங்கள் விநியோகிப்பாளர்களது வேலைப்பளுவை குறைப்பதற்காகவும் எங்கள் விநியோக திறனை அதிகரிக்கவும், அதிக வாடிக்கையாளர்களுக்கு மிகவும் நிலையான மற்றும் செலவு குறைந்த வழியில் சேவை செய்யவும் அனுமதிக்கும்” என்று ஃபூட்பாண்டா சிங்கப்பூரின் செயல்பாட்டு இயக்குனர் ஜார்ஜ் ரூபியோ கூறினார்.

ஃபூட்பாண்டா நிறுவனத்தின் தன்னாட்சி அல்லது தானியங்கி ரோபோக்களின் விநியோக முன்னோடி திட்டத்தினை கடந்த மே மாதத்தில் விஸ்ஸின்(Whizz) நான்கு தானியங்கி ரோபோக்களை சிங்கப்பூரில் உள்ள என்.டி.யு (NTU) வளாகத்தில் அறிமுகப்படுத்தி செயல்படுத்தியது.

ரோபோக்கள் தானியங்கி ஓட்டுநர் முறையில் செயற்பட்டாலும் அவற்றின் செயற்பாடுகள் நிவாகக்குழுவினால் கட்டுப்படுத்தப்படுகின்றன. இந்த ரோபோக்களது சோதனைக் காலம் நவம்பர் 21 வரை நடைமுறையில் இயங்கும் என்றும் இத்திட்டம் சிங்கப்பூருக்குள் மேலும் விரிவாக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது என்றும் அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here