வக்பு திருத்த சட்டத்திற்கு எதிர்ப்பு: ஐபிஎஸ் அதிகாரி பதவி விலகல்

பாட்னாபீகார் மாநிலம் சீதாமஹியைச் சேர்ந்தவரும், 1995ஆம் ஆண்டு பயிற்சி முடித்த ஐபிஎஸ் அதிகாரியுமான நூருல் ஹுதா தன்பாத், அசானோல், டெல்லி ஆகிய ரயில்வே பிரிவுகளில் பாதுகாப்பு மற்றும் குற்றத் தடுப்பு நடவடிக்கைகளில் சிறப்பாகப் பணியாற்றியதற்காக அவருக்கு இருமுறை குடியரசுத் தலைவரின் விசிஷ்ட சேவா பதக்கம் வழங்கப்பட்டுள்ளது. மேலும், காவல்துறைத் தலைவரின் டிஜி சக்ரா விருதையும் இருமுறை பெற்றுள்ளார்.

சீதாமஹியில் பொருளாதாரத்தில் பின் தங்கியுள்ள 300 மாணவர்களுக்கு நூருல் ஹுதா இலவசக் கல்வி அளித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. அவர் தற்போது இந்தியா கூட்டணியில் அங்கம் வகிக்கும் விகாஷீல் இன்சான் கட்சியில் உறுப்பினராக இணைந்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here