நைஜீரியா: விவசாயிகள், கால்நடை பராமரிப்பாளர்கள் இடையே மோதல் – 56 பேர் பலி

அபுஜா,ஆப்பிரிக்க நாடான நைஜீரியாவின் பினு மாகாணத்தில் விவசாயிகளுக்கும், கால்நடை பராமரிப்பாளர்களுக்கும் இடையே பல மாதங்களாக மோதல் போக்கு நிலவி வருகிறது. இது மத ரீதியிலான மோதலாக உருவெடுத்து வருகிறது. கிறிஸ்தவ மதத்தை சேர்ந்தவர்கள் அதிக அளவில் விவசாய பணியிலும், இஸ்லாமிய மதத்தை சேர்ந்தவர்கள் அதிக அளவில் கால்நடை பராமரிப்பு பணியிலும் ஈடுபட்டு வருகின்றனர். இரு தரப்பினருக்கும் இடையே ஏற்படும் மோதலில் உயிரிழப்பு சம்பவங்களும் அரங்கேறி வருகிறது.

இந்நிலையில், பினு மகாணம் குவம், லொகோ ஆகிய பகுதிகளில் விவசாயிகளை குறிவைத்து கால்நடை பராமரிப்பாளர்கள் தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதலில் 56 பேர் உயிரிழந்தனர். இந்த தாக்குதலை தொடர்ந்து அப்பகுதிகளில் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here