முன்னாள் மக்களவை சபாநாயகர் டான்ஸ்ரீ ரம்லி நகா தாலிப் பினாங்கின் 9ஆவது கவர்னராக நியமனம்

முன்னாள் மக்களவை சபாநாயகர் டான்ஸ்ரீ ரம்லி நகா தாலிப் பினாங்கின் ஒன்பதாவது கவர்னராக  மே 1, 2025 முதல் நியமிக்கப்பட்டார். இன்று இஸ்தானா நெகாராவில் உள்ள டேவான் சிங்காசானா கெச்சிலில் பணி நியமனம் வழங்கும் நிகழ்வின் போது, ​​மாமன்னர் சுல்தான் இப்ராஹிமிடம் இருந்து அவர் நியமனத்தைப் பெற்றார். விழாவில், 84 வயதான ரஹீமிற்கு ‘துன்’ பட்டமும் (SMN) விருதும் வழங்கி கெளரவிக்கப்பட்டார்.

பினாங்கு மாநில கவர்னராக ரம்லியின் நியமனம், பினாங்கு மாநில அரசியலமைப்பின் பிரிவு 1 இன் படி, மே 1, 2025 முதல் ஏப்ரல் 30, 2029 வரை நான்கு ஆண்டு காலத்திகானது. மே 1, 2021 முதல் இந்தப் பதவியை வகித்து வரும் துன் அகமது ஃபுஸி அப்துல் ரசாக்கிடமிருந்து அவர் பொறுப்பேற்கிறார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here