புத்ரா ஜெயா,
கடந்த 2013ஆம் ஆண்டுக்குப் பின்னர் மிகச் சிறந்த தேசிய சராசரி தர (ஜிபிஎன்) அடைவுநிலையை 2024ஆம் ஆண்டு எஸ்பிஎம் தேர்ச்சி விகிதம் அடையப் பெற்றிருக்கிறது.

2013ஆம் ஆண்டில் 4.49ஆக இருந்த அந்த அடைவுநிலை கடந்த ஆண்டு எஸ்பிஎம் தேர்ச்சி விகிதத்தில் 4.60 ஆக அதிகரித்திருக்கிறது என்று கல்வி தலைமை இயக்குநர் டத்தோ அஸ்மான் அட்னான் தெரிவித்தார்.

கடந்த 2022ஆம் ஆண்டு எஸ்பிஎம் தேர்வில் பதிவான 4.74 அடைவுநிலையைக் காட்டிலும் கடந்த ஆண்டுக்கான ஜிபிஎன் அடைவுநிலை 0.14 என்ற மாறுபாட்டைக் கொண்டிருக்கிறது என்பதை அவர் சுட்டிக்காட்டினார். 2024ஆம் ஆண்டு எஸ்பிஎம் தேர்வின் ஒட்டு மொத்தசூஅடைவுநிலையும் பெருமைப்படத்தக்கதாக உள்ளது. 2013ஆம் ஆண்டுக்குப் பின்னர் பெறப்பட்டிருக்கும் மிகச் சிறப்பான தேர்ச்சி அடைவுநிலையாகும் இது என்று அவர் குறிப்பிட்டார்.








