பிச்சை எடுக்கும் இடத்திற்காக சண்டை: ஆடவர் கத்தியால் குத்திக் கொல்லப்பட்டார்

ஷாஆலம் செக்சன் 18 (Shah Alam Seksyen 18) இல் உள்ள ஒரு வங்கியின் முன் பிச்சை எடுக்கும் இடம் தொடர்பாக ஏற்பட்ட சண்டையில் ஆடவர்ஒருவர் மற்றொரு பிச்சைக்காரரை கத்தியால் குத்திக் கொன்றார் என ஷாஆலம் மாவட்ட போலிஸ் தலைவர் முகமட் இக்பால் இப்ராஹிம் ( Mohd Iqbal Ibrahim) கூறினார்.

இந்த சம்பவம் குறித்து மதியம் 12 மணியளவில் பொதுமக்களிடமிருந்து போலிஸ் துறைக்கு புகார் கிடைத்ததாக அவர் கூறினார். இந்நிலையில் பிச்சை எடுக்கும் இடம் தொடர்பாக  அவர்கள் இருவருக்கும் இடையே  வாக்குவாதம் ஏற்பட்டது.

இதனால் சந்தேக நபர் கத்தியால் பாதிக்கப்பட்டவரின் மார்பில் பல முறை குத்தியதில் மயக்கமடைந்து தரையில் விழுந்தார். சம்பவம் நடந்த இடத்தில் மதியம் 12.30 மணியளவில் அந்த சந்தேக நபர் கைது செய்யப்பட்டதாகவும்  அவர் கூறினார்.

சோதனையின் முடிவுகளில் சந்தேக நபருக்கு ஒன்பது குற்றப் பதிவுகள் இருப்பது கண்டறியப்பட்டது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here