ஆயிர் கூனிங் சட்டமன்ற இடைத் தேர்தலில் தேசிய முன்னணி வெற்றி

தாப்பா:

இன்று நடந்து முடிந்த ஆயிர் கூனிங் சட்டமன்ற இடைத் தேர்தலில் தேசிய முன்னணி மீண்டும் மகத்தான வெற்றியை பதிவு செய்தது.

தேசிய முன்னணி வேட்பாளர் 10,971 வாக்குகளை பெற்றார்.

பயங்கர எதிர்பார்ப்புக்கு மத்தியில் வாக்குகள் எண்ணப்பட்டது. இதில் தேசிய முன்னணி வேட்பாளர் யுஸ்ரி பக்கீர் 10,971 வாக்குகளை பெற்று வெற்றி பெற்றார்.

அவரை எதிர்த்து போட்டியிட்ட தேசியக் கூட்டணி வேட்பாளர் அப்துல் முஹைமின் மாலேக் 6,159 வாக்குகளை பெற்றார்.பிஎஸ்எம் கட்சியின் வேட்பாளர் பவானி 1,059 வாக்குகளை பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here