அடையாளம் காணப்படாத தொற்று நோய்; மாணவர்கள் ஊழியர்கள் என 39 பேர் மருத்துவமனையில் அனுமதி

கெடாவின் யான் நகரில் உள்ள ஒரு பள்ளியைச் சேர்ந்த மாணவர்கள்,  ஊழியர்கள் உட்பட சுமார் 39 பேர், இன்னும் அடையாளம் காணப்படாத “தொற்று நோய்” காரணமாக நோய்வாய்ப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். தனியார் பயிற்சி முகாமில் கலந்து கொண்ட பிறகு பாதிக்கப்பட்ட அனைவருக்கும் காய்ச்சல், இருமல், சொறி அறிகுறிகள் இருந்ததாக மாநில வீட்டுவசதி, உள்ளூர் அரசு மற்றும் சுகாதாரக் குழுத் தலைவர் மன்சோர் ஜகாரியா தெரிவித்தார்.

பள்ளியைச் சேர்ந்த மொத்தம் 763 மாணவர்கள் மற்றும் ஊழியர்கள் பயிற்சியில் பங்கேற்றனர் என்று அவர் கூறினார். இன்று மாலை தான் பயிற்சி முகாமுக்குச் செல்ல திட்டமிட்டுள்ளதாகவும் கூறினார். மன்சோரின் கூற்றுப்படி, மாணவர்கள் சுங்கை பட்டாணியில் உள்ள சுல்தான் அப்துல் ஹலீம் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாகவும் அவர்களின் உடல்நிலை சீராக உள்ளது. சம்பவம் குறித்து மாநில சுகாதாரத் துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளதாகவும், அதற்கான காரணத்தைக் கண்டறிய விசாரணைகள் தொடர்ந்து நடைபெற்று வருவதாகவும் அவர் கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here