கால்பந்து போட்டிகளில் பிரச்சினை ஏற்படுத்துவதை நிறுத்துங்கள்: ரசிகர்களை எச்சரித்த ஹன்னா

பிரச்சினையை ஏற்படுத்துவதற்காகவே போட்டிகளுக்குச் செல்லும் கால்பந்து ரசிகர்கள் இதுபோன்ற மோசமான நடத்தையை நிறுத்த வேண்டும் என்று இளைஞர்  விளையாட்டுத் துறை அமைச்சர் ஹன்னா யோ கூறுகிறார். மலேசிய கோப்பை இறுதிப் போட்டிக்கு முன்பு புக்கிட் ஜாலீல் தேசிய மைதானத்திற்கு வெளியே போட்டி ரசிகர்களிடையே நேற்று இரவு நடந்த சமீபத்திய சம்பவத்தைக் குறிப்பிட்டு, இதுபோன்ற செயல்கள் மற்ற ஆதரவாளர்களைத் தடுக்கக்கூடும் என்று அவர் கூறியதாக பெர்னாமா செய்தி வெளியிட்டிருந்தது.

இதுபோன்ற சம்பவங்கள் நடக்கும்போது, ​​அவை சூழலைக் கெடுக்கின்றன. மேலும் சிலரை, குறிப்பாக குடும்பங்களை மைதானங்களுக்குச் செல்வது குறித்து பாதுகாப்பற்றதாக உணர வைக்கக்கூடும் என்று இன்று கோலாலம்பூரில் நடந்த ராக்கான் மூடா மாநாடு 2025இன் நிறைவு விழாவை நடத்திய பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறினார்.

எனவே குழப்பத்தை ஏற்படுத்துவதற்காக வருபவர்கள் தங்கள் அணுகுமுறையை மாற்றிக்கொள்ள வேண்டும் என்று நான் கேட்டுக்கொள்கிறேன். ஏனெனில் அது கால்பந்திற்கு தீங்கு விளைவிக்கும். மன அழுத்தத்தைக் குறைக்கும் ஒரு வடிவமாக, முழு குடும்பங்களும் விளையாட்டு மற்றும் பொழுதுபோக்கை அமைதியாக அனுபவிக்க வேண்டும் என்பதே எங்கள் விருப்பம்.”

நேற்று இரவு புக்கிட் ஜாலீலில் உள்ள தேசிய மைதானத்தில் ஜோகூர் டாருல் தக்சிம் (JDT), ஸ்ரீ பஹாங் FC இடையேயான இறுதிப் போட்டியைக் காண தங்கள் குழந்தைகளை அழைத்து வரும் பல ஆதரவாளர்களின் ஊக்கமளிக்கும் போக்கையும் அவர் குறிப்பிட்டார். நேற்று இரவு நடந்த போட்டியில், JDT ஸ்ரீ பஹாங்கை 2-1 என்ற கணக்கில் தோற்கடித்து 2024/2025 மலேசியா கோப்பையை வென்றது. நான்கு முக்கிய மலேசிய கால்பந்து பட்டங்களையும் – சூப்பர் லீக், FA கோப்பை, மலேசியா கோப்பை மற்றும் சுல்தான் ஹாஜி அகமது ஷா கோப்பை (தொண்டு கேடயம்) – தொடர்ந்து மூன்றாவது முறையாக வென்று வரலாறு படைத்தது.

இதற்கிடையில், சீனாவின் ஜியாமெனில் நேற்று 2025-2029 காலத்திற்கான பேட்மிண்டன் உலக கூட்டமைப்பின் (BWF) மன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்ட மலேசியாவின் முன்னாள் பேட்மிண்டன் சங்கத்தின் (BAM) தலைவர் நோர்சா ஜகாரியாவையும் ஹன்னா வாழ்த்தினார். இது அவரது தலைமை BWF ஆல் அங்கீகரிக்கப்பட்டுள்ளது என்பதை நிரூபிக்கிறது. அவருக்கு நான் நல்வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். மேலும் அவர் அனைத்துலக அரங்கில் மலேசியாவிற்கு தொடர்ந்து அவர் கவனம் செலுத்துவார் என்று நம்புகிறேன். ஏனெனில் இது அவரது தலைமைத்துவ குணங்களை பிரதிபலிக்கிறது என்று அவர் கூறியதாக மேற்கோள் காட்டப்பட்டது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here