நாசி லெமாக், ரொட்டி சானாய், சாத்தே போன்ற உணவுகள் கடந்த 13 ஆண்டுகளில் 2 மடங்கு விலையேற்றம்

மலேசியர்களுக்கு மிகவும் பிடித்த உணவான நாசி லெமாக் (Nasi Lemak), ரொட்டி சானாய் (Roti Canai), சாத்தே (Satay) போன்ற உணவுகள் கடந்த 13 ஆண்டுகளில் 2 மடங்கு விலையேற்றம் கண்டுள்ளது என 2024-ஆம் ஆண்டுக்கான பயனீட்டாளர் விலைக் குறியீட்டு அறிக்கையில், மலேசியப் புள்ளிவிவரத் துறை அதனைத் தெரிவித்தது. 2011-ல் வெறும் 90 சென்னாக இருந்த ஒரு ரொட்டி ச்சானாயின் சராசரி விலை, 71.1 விழுக்காடு அதிகரித்து கடந்தாண்டு 1 ரிங்கிட் 54 சென்னாக உயர்ந்து உள்ளது.

நாசி லெமாக்கோ, 2 ரிங்கிட் 3 சென்னிலிருந்து தற்போது 3 ரிங்கிட் 68 சென்னுக்கு உயர்ந்துள்ளது. இது 81.3 விழுக்காடு விலை உயர்வாகும். 2011-ல் ஒரு குச்சி சாத்தே 51 சென்னுக்கு விற்கப்பட்டது; இப்போது 113.7 விழுக்காடு அதிகரித்து 1 ரிங்கிட் 9 சென்னுக்கு விற்கப்படுவதாக அத்துறை கூறியுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here