புத்ரா ஹைட்ஸில் எரிவாயு குழாய் தீ விபத்தில் பாதிக்கப்பட்ட வீடுகளை சீரமைப்பு பணிகளுக்காக 40 மில்லியன் ரிங்கிட் ஒதுக்கீடு

புத்ரா ஹைட்ஸில் எரிவாயு குழாய் தீ விபத்தில் பாதிக்கப்பட்ட வீடுகளை சீரமைப்பு பணிகளுக்காக 40 மில்லியன் ரிங்கிட் ஒதுக்கப்பட்டுள்ளது என சிலாங்கூர் மந்திரி புசார் டத்தோஶ்ரீ அமிரூடின் ஷாரி தெரிவித்தார்.

இந்த ஒதுக்கீட்டில் மத்திய அரசின் ஒதுக்கீடுகள் மற்றும் பொது பங்களிப்புகள் அடங்கும் என அவர் கூறினார். புத்ரா ஹைட்ஸைச் சுற்றியுள்ள குடியிருப்புகளை புதுப்பித்தல் பணிகளை சைம் டார்பி மேற்கொள்ளும்.

மேலும் கம்போங் சுங்கை பாரு பணிகளை எஸ்பிஎன்பி மேற்கொள்ளும் என்றும் அவர் தெரிவித்தார்.
மேலும் வீட்டை புதுப்பித்தல் செயல்முறையில் மின் இணைப்பு போன்ற அடிப்படை வசதிகளில் கவனம் செலுத்தபடும் என்றார்.

30,000 ரிங்கிட்டுக்கும் குறைவான சிறிய சேதங்களுக்கு, வீட்டு உரிமையாளர்கள் தங்கள் வீட்டு பழுதுபார்க்கும் பணிகளை சொந்தமாக மேற்கொள்ளம்.

பின்னர் பிபிடியிடம் அதற்கான செலவு தொகையை திரும்ப பெறலாம் என்று அவர் இன்று ஷாஆலமில் நடைபெற்ற செய்தியாளர் கூட்டத்தில் கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here