தனியார் மருத்துவர்கள் அமைதிப் பேரணியை அறிவிப்பு

இன்று முதல் தனியார் சிகிச்சை மையங்களில் மருந்து மாத்திரைகளின் விலைகளைப் பார்வைக்கு வைப்பதை கட்டாயம்படுத்தியுள்ள அரசாங்கத்தின் நடவடிக்கையை கண்டித்து, தனியார் மருத்துவர்கள் அமைதிப் பேரணியை அறிவித்துள்ளனர்.

வரும் செவ்வாய்க்கிழமை புத்ராஜெயாவில் உள்ள சுகாதார அமைச்சின் கட்டடத்திலிருந்து பிரதமர் துறை அலுவலகம் வரை அவர்கள் ஊர்வலமாகச் செல்கின்றனர்.

மேலும் MMA தலைவராக விரைவில் பொறுப்பேற்கவுள்ள Dr திருநாவுக்கரசு ராஜுவும் அப்போஸ்டரை தனது X தளத்தில் பகிர்ந்துள்ளார். இது வெறும் அடையாள மறியல் அல்ல; நாங்கள் தொடர்ந்து செயல்பட அரசாங்கத்திடம் வைக்கும் முறையீடு என்றார் அவர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here