நிலவில் முதல் முறையாகக் கலைப்படைப்பைக் காட்சிக்கு வைத்த பால் வான் ஹோய்டோன்க் (Paul Van Hoeydonck) 99வயதில் காலமானார்.
1925ஆம் ஆண்டு பிறந்த அவர் சிற்பங்கள் செய்வது, வரைவது, ஓவியம் தீட்டுவது எனப் பல்வேறு கலைப்படைப்புகளை உருவாக்கியிருக்கிறார். பல ஆண்டுகளாக “Fallen Astronaut” என்ற அவரது கலைப்படைப்பு மட்டுமே நிலவில் இருந்தது.
1971ஆம் ஆண்டு அப்போலோ 15 விண்கலத்தில் சென்றோர் அந்தப் படைப்பை நிலவில் விட்டுவந்தனர். விண்வெளி ஆய்வில் ஈடுபட்டிருந்தபோது மாண்ட 14 விண்வெளி வீரர்களுக்கு மரியாதை செலுத்தும் வகையில் அந்தப் படைப்பு நிலவில் வைக்கப்பட்டது.









