பட்டறையில் ஏற்பட்ட தீ விபத்தில் 20 கார்கள், 3 மோட்டார் சைக்கிள்கள் எரிந்தன

புக்கிட் ஜாலில் பண்டார் பூச்சோங் ஜெயாவில் உள்ள பட்டறையில் ஏற்பட்ட தீ விபத்தில் 20 கார்கள் மற்றும் 3 மோட்டார் சைக்கிள்கள் எரிந்து தீக்கிரையாகின.

இந்த சம்பவம் குறித்து காலை 10.56 மணியளவில் தீயணைப்புத் துறைக்கு அவசர அழைப்பு வந்ததாகவும் பூச்சோங், சுபாங் ஜெயா, ஸ்ரீ கெம்பாங்கன், டாமன்சாரா தீயணைப்பு நிலையங்களைச் சேர்ந்த மொத்தம் 21 அதிகாரிகள் மற்றும் பணியாளர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து தீயை அணைக்கும் நடவடிக்கைகள் உடனடியாக மேற்கொள்ளப்பட்டன.

மேலும் இந்த தீ விபத்தில் பட்டறை கட்டமைப்பு சுமார் 70 விழுக்காடு சேதமடைந்ததாகவும், எந்த உயிரிழப்பும் ஏற்படவில்லை என்றும் சிலாங்கூர் தீயணைப்புத் துறையின் உதவி செயல்பாட்டு இயக்குநர் அஹ்மத் முக்லிஸ் மொக்தார் ( Ahmad Mukhlis Mokhtar )கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here