அமெரிக்காவில் சாண்டிகோ (San Diego) நகரில் படகு கவிழ்ந்து விபத்து ஏற்பட்டதில் 3 பேர் உயிரிழந்தனர். 4 பேர் காயம் அடைந்தனர். 9 பேர் மாயமாகினர்.
அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணம் சாண்டிகோ நகரின் டோரி பின்ஸ் (Torrey Pines) கடற்கரையில் இருந்து 15 மைல் தொலைவில் படகு ஒன்று விபத்துக்குள்ளானது. தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த கடலோர காவல் படையினர், நீண்ட நேரம் போராடி மீட்பு பணியை மேற்கொண்டனர்.
இந்த விபத்தில் படகில் இருந்த 20க்கும் மேற்பட்டோர் கடல்நீரில் மூழ்கினர். சம்பவ இடத்திலேயே 3 பேர் நீரில் மூழ்கி உயிரிழந்த வேளை நாள்வர் சொற்ப காயத்துடன், கடலோர காவல் படையினர் மீட்டனர். மேலும், 9 பேரை தேடும் பணி துரிதமாக நடைபெற்று வருகிறது.









