மலேசியாவில் தற்போது செயற்கை நுண்ணறிவு (AI) தொடர்பான உயர் தொழில்நுட்ப மற்றும் பொறியியல் துறைகளில் 10,000 பேருக்கு வேலை வாய்ப்பு

மலேசியாவில் தற்போது செயற்கை நுண்ணறிவு (AI) தொடர்பான உயர் தொழில்நுட்ப மற்றும் பொறியியல் துறைகளில் 10,000 பேருக்கு வேலை வாய்ப்புகள் உள்ளன.

இந்தத் தேவையை பூர்த்தி செய்வது நாட்டின் முன்னேற்றத்திற்குத் தேவையான முக்கிய நடவடிக்கையாகும் என பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் தெரிவித்தார். இப்போது செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பமும் நாட்டின் வளர்ச்சியில் முக்கிய பங்காற்றுகிறது என்றும் அவர் கூறினார்.

எனினும், AI என்பது வெறும் தொழில்நுட்ப முன்னேற்றம் மட்டும் அல்ல; அது நமது பண்பாட்டையும், வரலாற்றையும், கலாச்சாரத்தையும் பிரதிபலிக்க வேண்டிய தேவை உள்ளது.

தொழில்நுட்ப முன்னேற்றத்துடன் நாட்டின் அடையாளம் மற்றும் மனித இயல்புகள் குறையாமல் பாதுகாக்கப்பட வேண்டும் என்றும் பிரதமர் வலியுறுத்தினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here