ஜார்ஜ் டவுன்:
முன்னாள் பினாங்கு துணை முதல்வர் டாக்டர் பி. ராமசாமிக்கு எதிராக நாளை (மே 14) பட்டர்வொர்த் செஷன்ஸ் நீதிமன்றத்தில் 17 குற்றவியல் நம்பிக்கை மோசடி குற்றச்சாட்டுகள் சுமத்தப்படக் கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இருப்பினும் ஊழல் குற்றச்சாட்டு தொடர்பாக MACC எந்தவொரு தகவலையும் வெளியிடவில்லை.
பொது ஊழியர் அல்லது முகவர் மூலம் குற்றவியல் நம்பிக்கை மோசடி செய்தல் தொடர்பில் குற்றவியல் சட்டத்தின் பிரிவு 409 இன் கீழ் குற்றச்சாட்டுகள் சுமத்தப்படும் என்று நம்பத்தகுந்த வட்டாரங்கள் உறுதிப்படுத்தின, இது குற்றம் நிரூபிக்கப்பட்டால் 20 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை, பிரம்படி மற்றும் அபராதம் விதிக்கப்படும்.
2019 ஆம் ஆண்டில் பினாங்கு இந்து அறக்கட்டளை வாரியம் (PHEB) தங்க முலாம் பூசப்பட்ட தேரை வாங்கியது மற்றும் நான்கு தொண்டு நிறுவனங்களுக்கு நன்கொடைகள் வழங்கியது ஆகியவை குற்றச்சாட்டுகளில் அடங்கும்.
76 வயதான ராமசாமி, டிசம்பர் 2024 இல் இந்தோனேசியாவிற்கு பயணத் தடை விதிக்கப்பட்டது. இருப்பினும், தனக்கு எதிரான அனைத்து குற்றச்சாட்டுகளையும் பேராசிரியர் டாக்டர் பி.இராமசாமி மறுத்தார்.
இந்நிலையில் ராமசாமி புதன்கிழமை (மே 14) பட்டர்வொர்த் நீதிமன்றத்திற்கு மலேசிய ஊழல் தடுப்பு ஆணையம் (MACC) சட்டம் 2009 இன் பிரிவு 23(1) இன் கீழ் குற்றச்சாட்டுகளை எதிர்கொள்ள அழைத்து வரப்படுவார் என்று அவரது வழக்கறிஞர் ஷம்ஷேர் சிங் திண்ட் தெரிவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.